தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத இதுவரை 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேரும் விண்ணப்பித்துள்ளனர் எனவும் கூறியுள்ளது.
Leave your comments here...