தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Scroll Down To Discover

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டாம் என்று தமிழக அரசு தெற்கு ரெயில்வேயிடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், வரும் 31 ம் தேதி வரை பஸ் போக்குவரத்து சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், கோவை- காட்பாடி சிறப்பு ரயில்களும், அரக்கோணம் – கோவை இண்டர்சிட்டி ரயில்கள், கோவை மயிலாபுதுறை ஜன்சப்தி சிறப்பு ரயில், திருச்சி – நாகர்கோயில் சிறப்பு ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான கட்டணம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.