தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு.!

Scroll Down To Discover

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் 2 வாரங்களுக்கு முன்பு மிக கடுமையாக இருந்தது. நாளொன்றுக்கு தொற்று ஏற்படக் கூடியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

-காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
-மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்
-தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி
-மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி கடைகள் நேரக்கட்டுபாடுடன் செயல்பட அனுமதி
– காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி

அதன்படி, நோய் பரவல் அதிகம் இருக்கும் கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் பிற மாவட்டங்களில் தளர்வுகளுடன் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.