தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா..? அண்ணாமலை கேள்வி..!

Scroll Down To Discover

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். வரும் அக்.,2ம் தேதி தமிழகம் முழுவதும் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடக்கவிருக்கும் நிலையில் தமிழகத்தில் அனுமதி மறுப்பதற்கு காரணம் என்ன? ஆர்.எஸ்.எஸ்., பேரணியால் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என போலீசார் அளித்த விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? அண்டை மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.