தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமனம் : ஜனாதிபதி உத்தரவு

Scroll Down To Discover

தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி என்பவரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  இவர் நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வருகிறார்.

ரவீந்திர நாராயண ரவி என்ற முழு பெயரை கொண்ட அவர், பீகாரில் பிறந்தவர். கடந்த 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கிய அவர், மத்திய மற்றும் மாநில அரசு பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர்.

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பஞ்சாப் கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.  இந்த சூழலில், பன்வாரிலால் புரோகித்துக்கு பதிலாக, தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டு உள்ளார்.