தப்லிக் – இ – ஜமாத் தலைவர், மவுலானா சாத் மீதான பணமோசடி வழக்கு – பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு..!

Scroll Down To Discover

டில்லியில், கடந்த மார்ச் மாதம், இரண்டாவது வாரத்தில், தப்லிக் – இ – ஜமாத் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 9,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, டில்லி அரசின் உத்தரவுப்படி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், மாநாடு நடத்திய, கந்தால்வி மீது, டில்லி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இப்புகாரை அடிப்படையாக கொடு தப்லிக் – இ – ஜமாத்தின் பணப் பரிவர்த்தனைகளை விசாரிக்க, கருப்பு பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. கந்தால்வி மீ்தும் ஜமாத் அமைப்புடன் தொடர்பில் உள்ள அறக்கட்டளைகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பணமோசடி வழக்கு தொடர்பாக கந்தால்வி மற்றும் தப்லீக் ஜமாத்துடன் தொடர்புடைய அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மும்பை, டில்லி, ஐதராபாத் மற்றும் சில இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.