தன் பாலின திருமண ஜோடிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

Scroll Down To Discover

டெல்லி: தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஐந்தில் மூன்று நீதிபதிகள் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என தீர்ப்பு வழங்கினர்.

தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்க  மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது. சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்யவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காததால் சிறப்பு திருமணம் மற்றும் வெளிநாட்டு சட்டங்களை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம்தெரிவித்துள்ளது.