தனியார் ரயில்களை இயக்கும் நிறுவனங்களே ரயிலின் நிறுத்தங்களை தேர்வு செய்யலாம்: ரயில்வே துறை

Scroll Down To Discover

நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 150 ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2023ல் தனியார் ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் பம்பார்டியர், ஆல்ஸ்டாம், சீமென்ஸ் உள்ளிட்ட 23 நிறுவனங்களை ரயில்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

முக்கியமாக எந்தெந்த நிறுத்தங்களில் ரயில்களை நிறுத்துவது என்பதை அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கலாம்.ஆனால், மொத்த நிறுத்தங்களின் எண்ணிக்கை அதிவிரைவு ரயில்களின் நிறுத்தங்களின் எண்ணிக்கைக்கு மிகாமல் இருத்தல் அவசியம். நிறுத்தங்களின் பட்டியலை முன்கூடியே ரயில்வே துறையிடம் அளிக்க வேண்டும். ஓராண்டுக்கு அது நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களை தனியார் மயம் ஆக்குதல் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், ரயில்களின் தரத்தை நவீனமாக்கவும் மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவதற்குமான முயற்சியாகவும் கருதப்படுகிறது.

ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ரயிலுக்கான கட்டணத்தையும் நிர்ணயம் செய்ய உரிமை உண்டு. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.ரயில்களை இயக்குவது, கொள்முதல் செய்வது, வாடகைக்கு எடுப்பது என அனைத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.