தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு

Scroll Down To Discover

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ.1,200-லிருந்து ரூ.900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.800-லிருந்து ரூ.550 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ.600-லிருந்து ரூ.400 ஆகக் குறைக்கப்படுகிறது. வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.