தனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் – பிரதமர் மோடி டிவிட்

Scroll Down To Discover

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும் டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.இந்நிலையில் பிரதமர் மோடி டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்து வருவதாக, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டார். அவரது டுவிட்டர் பதிவுக்கு, பலரும் ‘NoSir’ என பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து ‘#NoSir’ ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதன்படி, ‘வருகிற மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று தனது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களை பெண்கள் நிர்வகிக்கலாம். வாழ்க்கை மற்றும் பணியின் மூலமாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் பெண்களிடம் சமூக வலைத்தளப் பக்கங்களை ஒப்படைக்கத் தயார்’ என்று பதிவிட்டுள்ளார்.


இதற்காக சாதனைப் பெண்கள் தங்களது விபரங்களை எழுத்து மூலமாகவோ, விடியோ பதிவு மூலமாகவோ #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் பதிவிட வேண்டும். அதன்பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு மோடியின் சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துகளை பதிவிடும் வாய்ப்புகள் வழங்கப்படும். இது பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும் என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.