தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை : விநியோகிஸ்தர்கள் இருவர் உட்பட மூவர் கைது.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரியை விநியோகம் செய்த 2 பேர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் உசிலம்பட்டியை சேர்ந்த ஞானமுருகன் என்பவர் கைது செய்யப் பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து விநியோகிஸ்தர்களாக செயல்பட்டு வந்த தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சக்தி, மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் உசிலம்பட்டி நகர போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 லட்சத்தி 27ஆயிரம் ரூபாயும், 5லட்சத்தி 21ஆயிரம் மதிப்பலான லாட்டரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி: Ravi Chandran