தசரா பண்டிகை : 5 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட கோயில்.!

Scroll Down To Discover

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில், தசரா பண்டிகையை முன்னிட்டு 5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சேர்ந்து 2000, 500, 200, 100, 50, 10 ஆகிய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு அலங்கரித்துள்ளனர்.

நெல்லூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவர் முக்கல துவாரகாநாத் கூறுகையில், இக்கோயிலில் உள்ள அம்மன் சிலையை அலங்கரிப்பதற்கு 7 கிலோ தங்கம் மற்றும் 60 கிலோ வெள்ளி பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.