இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதேபோல், தென் சீன கடல் பகுதியில், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுடனும், சீனா, மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. தென் சீன கடல் பகுதியில் சீன கடற்படையினர் அத்துமீறுவதும், மற்ற நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும் வழக்கமாக உள்ளது.
NEW: U.S. Navy sends two aircraft carriers and several warships to South China Sea. pic.twitter.com/BR40DGTLkR
— Norbert Elekes (@NorbertElekes) July 4, 2020
இந்நிலையில், அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள், தென் சீன கடல் பகுதிக்கு அதிரடியாக அனுப்பப்பட்டுள்ளன. அங்கு, இந்த விமானங்கள், அமெரிக்க கடற்படை கப்பல்களுடன் இணைந்து, போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இதே பகுதியில், சீன கடற்படையினரும் அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க படையினரின் இந்த பயிற்சி, சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
https://twitter.com/USNavy/status/1279524133156651008?s=20
இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதாவது : தென் கிழக்கு ஆசியாவில் உள்ள எங்கள் நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று, தென் சீன கடல் பகுதியில் எங்கள் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.தென் சீன கடல் பகுதிக்கு, சீனா மட்டும் உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது. சர்வதேச சட்டம் எங்கெல்லாம் அனுமதிக்கிறதோ, அங்கெல்லாம் அனைத்து நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கும், கப்பல்கள் செல்வதற்கும் உரிமை உண்டு.இந்த உரிமையை உறுதி செய்யும் பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள், எந்தவித அச்சுறுத்தலும் இன்றி, சுதந்திரமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Leave your comments here...