ட்ரோன்களை பயன்படுத்த கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அனுமதி..!

Scroll Down To Discover

ஒருங்கிணைந்த நகர மேம்பாடு மற்றும் நீர் போக்குவரத்து அமைப்பு திட்டத்துக்காக கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் ட்ரோன்களை பயன்படுத்த, விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் ஆகியவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதி, ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து, 2021 டிசம்பர் 31ஆம் தேதி வரை அல்லது டிஜிட்டல் வான் தளத்தை முழுமையாக செயல்படுத்தும் வரை, இதில் எது முன்னதாக முடிகிறதோ அதுவரை செல்லுபடியாகும். இதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். இதில் விதிமுறை மீறப்பட்டால், ட்ரோன்களை பயன்படுத்தும் அனுமதி ரத்தாகி விடும்.