டேராடூன் சென்ற ரயில் பெட்டியில் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.!

Scroll Down To Discover

டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற பயணிகள் ரயில் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை

டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் கன்ஸ்ரூ பகுதியருகே இன்று வந்தபொழுது, அதன் சி4 பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால், ரெயிலில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். இதன்பின்பு ரெயில் நிறுத்தப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் நடந்தன.


இந்த தீ விபத்து பற்றி உத்தரகாண்ட் டி.ஜி.பி. அசோக் குமார் கூறும்பொழுது, மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. அனைத்து பயணிகளும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டு விட்டனர். தீ விபத்தினால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்டியில் பிடித்த தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.