டெஸ்லா ஆட்டோபைலட் குழுவில் நிறுவனத்தில் இந்தியர் நியமனம்..!

Scroll Down To Discover

டெஸ்லா’ நிறுவனத்தின் ‘ஆட்டோபைலட்’ குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் டெஸ்லா நிறுவனம், மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது. இதன் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், சமூக வலைதளம் வாயிலாக தன் நிறுவனத்திற்கு ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு அசோக் எல்லுசுவாமி என்ற இந்திய வம்சாவளியை எலான் மஸ்க் தேர்வு செய்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் எனப்படும், தானாக வாகனங்கள் இயங்கும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் அசோக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்டோபைலட் குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் ஊழியர் அசோக் எல்லுசுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.