கர்நாடக மாநிலம் ஆனேகல் அருகே அவளஹள்ளி பகுதியில் ரயில்வே கிராஸிங் கேட்டை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது மைசூரிலிருந்து ஓசூர் நோக்கி வந்த தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
டிப்பர் லாரி தண்டவாளத்தை பாதி தாண்டியபோதுதான் ரயில் வருவதை ஓட்டுநர் உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி தூரமாக ஓடியுள்ளார்.
ஆனால் வேகமாக வந்த ரயில் டிப்பர் லாரி மீது மோதி வெகுதூரம் இழுத்துச் சென்றது. இழுத்துச் செல்லப்பட்ட லாரி மின்கம்பத்தில் மோதி பக்கவாட்டில் தூக்கி வீசப்பட்டது. ரயிலில் இருந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை. ரயில் இஞ்சினுக்கு அடியில் சிக்கிய டிப்பர் லாரியை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். விபத்து காரணாக இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...