டிசம்பர் முதல் வாரம் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

Scroll Down To Discover

பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒருநாள் பயணமாக இது அமையும் என பாஜக மற்றும் ரயில்வே துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பாம்பன் ரயில்பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டை கடந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி இருந்தார். இந்த பாலத்தை அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக அர்பணிக்க உள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே அமையவுள்ள இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும், பிரதமர் மோடியின் பயணம் குறித்து மத்திய அரசுத் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.