டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வு

Scroll Down To Discover

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.இவற்றின் மூலம் அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. 20‌17 ஆம் ஆண்டுக்குப் பிறகு மதுபானங்கள் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட குவார்ட்டர் அளவு மது பாட்டில்களுக்கு 10 ரூபாயும், பீர் பாட்டில்களுக்கு 10 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஃபுல் விலை ரூ.40 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாள் ஒன்றிற்கு சராசரியாக 68 கோடி ரூபாய் முதல் 70 கோடி ரூபாய் வரையிலும், ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.