டயர் பஞ்சராகி நின்ற விமானம் : கைகளால் தள்ளிய ஊழியர்கள்: வைரலாகும் வீடியோ..!

Scroll Down To Discover

நேபாளம் நாட்டின் காத்மாண்ட் நகரை தலைமையிட கொண்ட யீட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் , பஜூரா மாவட்டத்தில் உள்ள கோல்டி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது.

அப்போது விமானத்தின் பின்பக்க டயர் வெடித்தது. பஞ்சாராகி ஓடுதளத்தில் நடுவில் நின்றதால் விமானத்தை நகர்த்த முடியவில்லை. இந்நிலையில் அதே ஓடுதளத்தில் மற்றொரு விமானம் தரையிறங்க முயன்றது. ஆனால் அந்த விமானம் தரையிறங்க முடியவில்லை.

உடனே விமானத்தில் பயணித்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் விமானத்தை கைகளால் தள்ளி சென்றனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.நெட்டிசன்கள் ஷேர் செய்தனர்,
https://twitter.com/defenceDetectiv/status/1466352357378179080?s=20
முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில்வே வழித்தடத்தில் சென்ற ரயில் தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது. இதையடுத்து, ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரெயில் பெட்டியை கைகளால் தள்ளிச் சென்றனர்.