ஜேஎன்யு மாணவர் ஷர்ஜில் இமாம் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு.!

Scroll Down To Discover

டில்லியில் உள்ள ஜே.என்.யு. எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர் ஷர்ஜில் இமாம். இவர் மாணவர்களான நாம் ஒன்றிணைந்தால் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்றார். இவர் பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர்.


இரு வழக்குகளிலும் ஷர்ஜில் இமாமை பீகாரின் ஜெகனாபாத் நகரில் அவரது சொந்த கிராமத்தில் பதுங்கியிருந்தவரை டில்லி போலீசார் இன்று கைது செய்தனர். இது குறித்து பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் அளித்த பேட்டியில், தேசத்திற்கு எதிரான எதனையும் யாரும் செய்ய கூடாது. ஷர்ஜில் இமாம் மீதான குற்றச்சாட்டுகள், கைது நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார்.