ஜெனகை மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா : 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்..!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பால்குடம் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்திய நிலையில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சோழவந்தான் மந்தை களத்தில் உள்ள திடலில் பூக்குழி இறங்கினர்.

முன்னதாக, சாமி வைகை ஆற்றில் இருந்து ஊர்வலமாக வந்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தது முதலில் மரியாதை பம்பைக்காரர் பூக்குழி இறங்க பின்பு பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் , பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதனைத் தொடர்ந்து, பூக்குழி இறங்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி பின்பு கோவிலுக்கு சென்று காப்புகளை கழற்றினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட எஸ்பி ஆலோசனையின் பேரில் ,சமயநல்லூர் டிஎஸ்பி தலைமையில் சோழவந்தான் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் சோழவந்தான் தீயணைப்பு துறையை சேர்ந்த காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பூக்குழி இறங்குவதற்கு முன்பு மழை பெய்ததால் சேரும் சகதியுமாக இருந்த நிலையில் பூக்குழி இறங்கிய பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் மணி முத்தையா, வள்ளி மயில் ,சோழவந்தான் அரிமா சங்க தலைவர் டாக்டர்.மருது
பாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவா, சோழவந்தான் ஆர். ஸ்டாலின், செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள் வைகை ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் நகை கடை மற்றும் நகை அடகுக்கடை உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் சோழவந்தான் வர்த்தக சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் பூக்குழி திருவிழா இரவு சங்க கோட்டை கிராமத்தார் சார்பாக மந்தை களத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
– மதுரை ரவிசந்திரன்