ஜூன் 21ல் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!

Scroll Down To Discover

ஜூன் மாதம் 21 முதல் 24 ஆம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, 22 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு, ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, நரேந்திர மோடியின் வாஷிங்டன் பயணம், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ‘ஆழமான மற்றும் நெருக்கமான கூட்டாண்மையை’ உறுதிப்படுத்த முயலும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.