ஜல்லிக்கட்டு : வாடிவாசல் ஆடுகளம் பகுதிகளை மாவட்ட எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு.!

Scroll Down To Discover

Madurai – RaviChandran


மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 14ஆம் தேதி, 15ஆம் தேதி பாலமேடு, ஜல்லிக்கட்டு 16ஆம் தேதி அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது இதனையொட்டி, அலங்காநல்லூர் பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் வாடிவாசல் காலை சேகரிப்பு பகுதி ஆடுகளம் உள்ளிட்ட இடங்களை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆய்வு செய்தார் .

பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்றுப்பகுதி காளைகள் சேகரிப்பு பகுதி காளைகள் வீரர்கள் மருத்துவ சோதனை செய்யும் பகுதி மற்றும் காளைகள் வெளியேறும் வாடிவாசல் பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார் . மேலும், மாவட்ட எஸ்பி கூறும்போது: மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து காளைகளுக்கு டோக்கன் வழங்குவது வீரர்களுக்கு டோக்கன் வழங்குவது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.