ஜம்மு காஷ்மீர் : 12 மணி நேரத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

Scroll Down To Discover

ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய இரு வேறு என்கவுன்டரில் பாகிஸ்தானில் இருந்த செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையே
5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

புட்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் ஜெய்ஷ் இ முகமத் கமாண்டர் பயங்கரவாதி ஜாஹித் வானி முக்கியமானவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று அவர் கூறினார்.மேலும் ஏகே 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த மாதத்தில் மட்டும் இதுவரை நடைபெற்ற 11 என்கவுன்டர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சனிக்கிழமையன்று தெற்கு காஷ்மீரின் பிஜ்பெஹாரா பகுதியில் 53 வயது காவலர் அவரது இல்லத்திற்கு அருகே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமைக் காவலர் அலி முகமது கனி மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.