ஜம்மு & காஷ்மீர் விவகாரம் நாட்டு மக்களுக்கு…! பிரதமர் நரேந்திரமோடி உரை..!!

Scroll Down To Discover

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி உரையின் போது கூறியது:-

 

வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்திய ஒற்றுமையில் உறுதியாக இருந்தனர். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வரலாற்று முக்கியத்துவமான முடிவை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் வரலாற்றில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது.

 

 

மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மக்களை மனதார பாராட்டுகிறேன். தீவிரவாதத்திற்கும், ஊழலுக்கும் 370 ஆவது பிரிவு ஊக்கமளித்துக் கொண்டிருந்தது. பயங்கரவாதம் பற்றி எரிய எரிபொருளாக இருந்த 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது

ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இருந்த தடைக்கல் பெயர்த்து எரியப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் 42000 பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஒன்றரை கோடி காஷ்மீரிகள் அதிக பலன்களை பெறப் போகிறார்கள். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் நாடு முழுவதும் சென்றடையவே இந்த நடவடிக்கை. காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை இனி யாரும் தடுக்க முடியாது என தனது உரையில் பிரதமர் மோடி கூறினார்