ஜம்மு – காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 36 பேர் பலி – பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு..!

Scroll Down To Discover

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது தோடா மாவட்டத்தின் Batote-Kishtwar தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, Trungal-Assar என்ற பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த 25 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கி இருப்பதால், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.