ஜம்மு – காஷ்மீரில் பாஜக மாவட்ட தலைவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு.!

Scroll Down To Discover

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புத்காம் மாவட்ட பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மோர்ச்சா பிரிவு தலைவராக இருந்து வருபவர் அப்துல் ஹமீது நஜார். இவர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர். சமீப காலங்களாக காஷ்மீரில் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 6ந்தேதி பா.ஜ.க. பஞ்சாயத்து தலைவர் சஜத் அகமது கான்டே என்பவர் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் பலியானார்.