ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் – தாக்க தொடங்கிய சுனாமி..!

Scroll Down To Discover

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹோன்ஷி அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைதொடர்ந்து சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது. கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் வர தொடங்கி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கடற்கரைக்கு அருகில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் கடல் நீர் உள்ளே புகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என ஜப்பான் பிரதமர் கிஷிடா வலியுறுத்தி உள்ளார்.

மேலும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தை அடுத்து ஜப்பானில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு மையத்தின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது