தமிழகத்தில் உள்ள பல பேரூராட்சிகளில் பேரூராட்சி தலைவர்கள் வேலையே செய்யாமல் மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிப்பதை மட்டும் தங்களது பணியாக செய்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு நேர் எதிராக குமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சி தலைவர் R.ஜெனுஷா(திமுக) மக்களின் தேவைகளை கேட்டறிந்து மக்களுக்கான பணியை செய்து வருகின்றார். இவர் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு முளகுமூடு பேரூராட்சியில் அமைந்திருக்கும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஐந்து குளங்களுக்கு மேல் தனது சொந்த பணத்தில் பல லட்சங்களை செலவு செய்து சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்துள்ளார்.
இதிலும் குறிப்பாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அமராவதி என்ற குளம் 50 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மிகவும் புதர் மண்டி காணப்பட்டது. இது குளமா அல்லது சதுப்பு நிலமா என என்னும் அளவில் மிகவும் மோசமாக இருந்தது.
ஆனால் முளகுமூடு பேரூராட்சி தலைவர் பொறுப்பேற்ற பிறகு இதையும் தனது சொந்த செலவில் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.இது அப்பகுதி மக்களிடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது. குளங்களை சுத்தம் செய்யும் பணிகளில் பேரூராட்சி தலைவருக்கு தன்னால் இயன்ற முழு உதவியும் பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்துதாஸ் அவர்களும் முளகுமூடு பேரூராட்சியில் பணியாற்றும் பணியாளர்களும் செய்துள்ளார்கள் என கூறப்படுகிறது.
இவ்வாறு குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பல குளங்கள் மக்கள் பயன்படுத்த முடியாத வண்ணம் காணப்படுகிறது.ஆனால் பொதுப்பணி துறையோ இதை கண்டு கொள்ளாமல் தனிநபர் எவராவது தனது சொந்த பணத்தில் சுத்தம் செய்வாரா என வேடிக்கை பார்க்கிறதோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது…!
Special Correspondent H.TharnesH
Leave your comments here...