சொகுசு கார் இறக்குமதி… நுழைவு வரி விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு..!

Scroll Down To Discover

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத் தொகையை கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.

நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தவும் ‘ரியல் ஹீரோ’க்களாக இருக்க வேண்டும்; ‘ரீல் ஹீரோ’க்களாக இருக்கக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் கூடுதலாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மஞ்சுளா அடங்கிய அமர்வில் வரும் 19ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.