செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் பாராட்டு!

Scroll Down To Discover

அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சனுடன் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா விளையாடினார்.

இதில் கடைசிவரை வெள்ளைநிறக் காய்களுடன் போராடிய பிரக்ஞானந்தா இறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்து 2வது இடம்பிடித்தார்.

பின்னர் தமிழ்நாடு வந்த பிரக்ஞானந்தாவிற்கு, தமிழக அரசு சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 31), பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து பாராட்டினார். இதுகுறித்து பிரக்ஞானந்தா தன்னுடைய ட்விட்டர் தளத்தில், “பிரதமரைச் சந்தித்தது மிகவும் பெருமிதத்திற்குரிய தருணம்” எனப் பதிவிட்டுள்ளார்.