சென்னை விமான நிலையத்தில் ரூ. 29.74 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!

Scroll Down To Discover

தங்கம் கடத்தப்படலாம் என்று உளவுப்பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏஐ-906 என்ற விமானத்தில் சென்னை வந்த நசருல் ஹக் (23) என்பவர் சந்தேகத்தில் பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 523 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய நான்கு பொட்டலங்களை அவர் தமது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. சுங்கச் சட்டத்தின்கீழ் அவரிடமிருந்து ரூ. 21.74 லட்சம் மதிப்பிலான 430 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


மற்றொரு நிகழ்வில், சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1687 என்ற விமானத்தில் சென்னை வந்த கடப்பாவைச் சேர்ந்த சிவசங்கர் ரெட்டி (34) என்பவரை விமான நிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் கம்பியில்லா துளையிடும் கருவி ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்த கருவியைத் திறந்து பார்த்தபோது ரூ.8 லட்சம் மதிப்பில் 158 கிராம் எடையில் வட்டமான ஓர் தங்கத் துண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இருவழக்குகளிலிருந்தும் மொத்தம் ரூ. 29.74 லட்சம் மதிப்பிலான 588 கிராம் தங்கத்தை சுங்கச்சட்டத்தின்கீழ் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.