சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பணிமனைக்கு சென்ற ரயில் தடம் புரண்டது. ரயில் பெட்டியின் நான்கு சக்கரங்களும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.பணிமனைக்கு சென்ற ரயில் என்பதாலும் பயணிகள் யாரும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ரயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave your comments here...