சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!

Scroll Down To Discover

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் ரயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து சென்டிரல் ரயில் நிலையம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் 4-வது நடைமேடையில் வந்து நின்றது. ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் நடைமேடையில் வந்து கொண்டிருந்தனர். அதில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அதில் 10 கிலோ எடையுள்ள போதை பொருள் இருப்பது தெரியவந்தது.

அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில் அவர், சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த தன்பால் கிரி (வயது 42) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பறிமுதல் செய்த போதை பொருள்களை போதைபொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.