சென்னையில் இருப்பவர்கள் எந்த சித்தரை வணங்கினால் கஷ்டமெல்லாம் தீரும்..?

Scroll Down To Discover

சென்னையில் இருப்பவர்கள் எந்த சித்தரை வணங்கினால் கஷ்டமெல்லாம் தீரும்..? என கேட்கிறார்கள்..திருவான்மியூரில் உள்ள ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சமாதி.அபூர்வ ஆற்றல் கொண்டது.தீராத வினையெல்லாம் தீருமிடம்.

அங்கே சென்று சண்முக கவசத்தை ஆறுமுறை படித்து குமாரஸ்வத்தை படித்தாலே போதும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளை பெறலாம்..தினசரி ஜபம்,தியானம் செய்பவர்களுக்கு இங்கு வந்த உடனே அந்த இடத்தின் சக்தியை உணரமுடியும்…

பாம்பன் சுவாமிகள் முருகனை நேரில் தரிசனம் செய்தவர்..இந்தியாவிலேயே தாந்தீரிக தவம் இருந்தவர்களில் இவர் முக்கியமானவர் முழுமையானவர்..தாந்த்ரீக தவம் மூலம் உலகில் எங்கும் எப்போதும் நினைத்த நேரத்தில் சென்றடைய முடியும்.