கடந்த மே 29-ம் தேதி மதுரையில், தி.க., கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் இணைந்து நடத்திய செஞ்சட்டை பேரணியில் இந்து கடவுள்களையும், சடங்குகளையும் அவமதிக்கும் வகையில் பாடல் பாடி, கோஷங்கள் எழுப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்து மக்கள் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மத உணர்வை புண்படுத்துதல், வழிபாட்டு நடைமுறையை அவமதித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தி.க.வினர் நான்கு பேர் மீது எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
Leave your comments here...