சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வங்கி கணக்கு : விரைவில் 3வது பட்டியல்..?

Scroll Down To Discover

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமானோர் கருப்பு பணம் போட்டு வைத்துள்ளதாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. அத்தகைய இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை தானாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி, முதல் முறையாக கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து அளித்தது. 2-வது தடவையாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து பகிர்ந்து கொண்டது.

இந்தநிலையில், 3-வது தடவையாக இம்மாதம் இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து அளிக்கிறது. தகவல் பகிர்வுக்கான சர்வதேச கூட்டமைப்பின் சிபாரிசின்பேரில், முதல் முறையாக ரியல் எஸ்டேட் சொத்து விவரங்களும் இந்த தகவல்களில் இடம்பெறுகிறது.

இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் சுவிட்சர்லாந்தில் வாங்கிக்குவித்த அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், நிலங்கள் ஆகியவையும், அவற்றின் மூலம் ஈட்டிய வருமான விவரங்களும் அளிக்கப்படுகின்றன.