சுற்றுச்சூழல் விழிப்புணர்வு : 17,000 தேங்காய்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை

Scroll Down To Discover

ஐதராபாத்தில் 17,000 தேங்காய்களை பயன்படுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய விநாயகர் சிலை மக்களை கவர்ந்துள்ளது. இந்த விநாயகர் சிலை 17,000 தேங்காய்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐதராபாத் நகரின் அமைப்பாளர் குமார் பேசுகையில், கணேஷ் பந்தல் பல்வேறு கருப்பொருள்களுடன் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தேங்காயில் செய்யப்பட்ட கணேஷ் பந்தலை அலங்கரித்துள்ளார். மக்கள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து. நம்மைச் சுற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை வாங்குவதை நாம் அனைவரும் பின்பற்றுவது முக்கியம். அதனால்தான் தேங்காயில் விநாயகர் சிலை செய்துள்ளோம். 17,000 தேங்காய்களை பயன்படுத்தி இந்த சிலையை செய்து முடிக்க 8 நாட்கள் ஆனது. இவ்வாறு அவர் கூறினார்.


ஐதராபாத் லோயர் டேங்க் பண்ட் சராய் ஐதராபாத்தில் வசிக்கும் அனூப் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலையை உருவாக்க எங்கள் நகரம் ஊக்குவித்து வருவதாகவும், சிலையைக் காண தொலைதூரத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாகவும், ஏராளமான மக்கள் கூடுவதாகவும் கூறினார்.

இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த தேங்காய் விநாயகர் சிலையை தயாரித்துள்ளோம். இங்கு எப்போதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலையை வைக்கிறோம். இதனை காண நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளைப் பயன்படுத்துவது அவசியம். நம் நாட்டைக் காப்பாற்ற, சுற்றுச்சூழல் நட்பு கொண்டாட்டங்களில் நாம் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், என்று பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை வாங்க வேண்டாம் என்று மற்றொரு பக்தரான ராஜேஷ்வர் அறிவுறுத்தினார்.