சுடுகாட்டிற்க்கு பொதுப்பாதை அமைக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

Scroll Down To Discover

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி  யூனியனுக்கு உட்பட்ட இலுப்பையூரணி பஞ்சாயத்து பகுதி கூசாலிபட்டியில் தமிழக அரசு சார்பில், ஐந்து சமுதாய பொதுமக்களுக்காக கடந்த 2010ல் சுடுகாடு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சுடுகாட்டிற்க்கு செல்வதற்கு பொது பாதை இல்லை. எனவே சுடுகாட்டிற்க்கு பொது பாதை அமைத்து தர வலியுறுத்தி தாசில்தார், பி.டி.ஓ., மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பொது பாதை அமைக்க சில அதிகாரிகளே இடையூறாக உள்ளனர். ஆகவே அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சுடுகாட்டிற்க்கு பொதுப்பாதை உடனே அமைக்க உத்தரவு வழங்கவும் கோரி, சமூக ஆர்வலர் பரமசிவன் தலைமையில், மாரிமுத்து மற்றும் இந்து முன்னணி நகர பொதுசெயலாளர் சுதாகரன் ஆகியோர் முன்னிலையில், ஆர்டிஓ ஆபீஸ் வளாகத்தில் அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆர்.டி.ஓ., விஜயா போராட்ட குழுவினரிடம், நேரில் வந்து ஆய்வு செய்து மயானத்திற்கு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

By
Pramashivam