சீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படுகிறத…? – கோவில் நிர்வாகம் விளக்கம்

Scroll Down To Discover

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கான பாதுகாப்பை இனி மத்திய தொழிலக பாதுகாப்பு படை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

சாய்பாபா கோவில் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும் என தகவல்கள் பரவத் தொடங்கின. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது

இந்நிலையில் கோவில் மூடப்படுவது குறித்து வெளியான தகவல்களை ஷீரடி கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கோவில் வழக்கம் போல் திறந்திருக்கும் என்றும், பிரசாத கூடம், பக்தர்கள் தங்குமிடம், மருத்துவமனை என அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.