சீந்தில் மூலிகை பாதுகாப்பானது: ஆயுஷ் அமைச்சகம் அறிவிப்பு

Scroll Down To Discover

சீந்தில் மூலிகை பாதுகாப்பானது என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினோஸ்போரா கார்டிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட கூடுச்சி (Tinospora cordifolia) என்றழைக்கப்படும் சீந்தில் மூலிகை ஆயுஷ் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் பாதுகாப்பு தன்மை குறித்து சமூக ஊடகங்களிலும் சில அறிவியல் இதழ்களிலும் வெளியான விஷயங்களை ஆயுஷ் அமைச்சகம் சமீபத்தில் கவனித்தது.

இதையடுத்து இந்த ஆலோசனையை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது:- அதில் கூடுச்சி எனப்படும் சீந்தில் மூலிகை பாதுகாப்பானது. அனால் அதேபோன்ற தோற்றத்தில் காணப்படும் தினோஸ்போரா கிரிஸ்பா என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரங்கள் தீங்கை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம். கூடுச்சி எனப்படும் சீந்தில் மூலிகை ஆயுஷ் சிகிச்சையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மூலிகை குறித்து பல ஆய்வு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கல்லீரலை பாதுகாக்கும் இதன் குணங்கள் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த கூடுச்சி ஆயுர்வேத மருந்தை, பதிவு செய்யப்பட்ட ஆயுஸ் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியறுத்தப்படுகிறது.