சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!

Scroll Down To Discover

குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் நடந்த மோசடி மற்றும் அதில் நடந்துள்ள, ரூ.1.034 கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்டோர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இதில், ராவத்தின் மனைவி பெயரில் உள்ள, 11.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பல முறை அமலாக்கத்துறை முன்பு சஞ்சய் ராவத் ஆஜரானார். கடந்த 28 ம் தேதியும் ஆஜராக வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டது. பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடப்பதை காரணம் காட்டி ஆஜராக மறுத்த சஞ்சய் ராவத், பின்னர் ஆஜர் ஆனார். தொடர்ந்து கைது செய்யும்படி சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று(ஜூலை 31) காலை 7 மணி முதல் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மோசடி தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. இதனால், அங்கு சிவசேனா கட்சியினர் குவிந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.