சிவகங்கையில் வாகன சோதனையின் போது 6.50 இலட்சம் ரூபாய் பறிமுதல்..!

Scroll Down To Discover

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதிசட்டமன்ற பொதுதேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை,காரைக்குடி, தேவகோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் கும்மங்குடி பாலம் அருகே பறக்கும் படை வட்டாட்சியர் ஜெயலட்சுமி தலைமையில், உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது வங்கிகளுக்கு பணம் வினியோகம் செய்ய வந்த பாதுகாப்பு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் வாகனம் விடுவிக்கப்பட்டது.

அதேபோல் சிவகங்கை காளவாசல் பகுதி சோதனை சாவடியில் பறக்கும் படை வட்டாட்சியர் மைலாவதி தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில், பிரகாஷ்ராஜ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதிலிருந்த 6.50லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்ட இந்நிலையில், தீவிர வாகன சோதனையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.