ஒரு யானை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 40 கிமீ நடக்கனும், குறைந்தபட்சம் 100 கிலோ உணவு சாப்பிடனும், குறைந்தபட்சம் 70 லிட்டர் தண்ணீர் குடிக்கனும். பெரும்பாலான யானைகள் இந்த மாதிரியான மரத்துக்கு அடியில் தான் ஓய்வு எடுக்கும் அப்படி ஓய்வு எடுக்கும் பொழுது இந்த மாதிரி அரைகுறையாக உடைபட்ட பாட்டில் அதோட பாதத்தில் குத்தி உள்ளே போயிடும். அது முடிந்த வரை காலை உதறி அந்த பாட்டில்களை வீசி விட முயலும் ஆனால் பெரும்பாலான பாட்டில்களை அதனால் உதற முடியாது.
அது அப்படியே சீல் பிடித்து கால் அழுகி நடக்க முடியாமல் எதாவது ஒரு மரத்தில சாஞ்சு நின்னு தன்னோட கால் அழுகி போவதை கண்ணீரோட பாத்து பாத்து ஒரு நாள் செத்தே போகும்.
அவ்வளவு பெரிய விலங்கை ஒரு சிறு கண்ணாடி பாட்டில் அதன் ஒட்டுமொத்த வாழ்வினை முடக்கி போட்டு விடுகிறது.தனி மனிதன் சிந்தனையில் மாற்றம் வந்தால் மட்டுமே இங்கு பெரிய சமூக மாற்றம் ஏற்படும் தயவுசெய்து இந்த தவறு செய்யாதீர்.
காடுகளை காப்போம்..!!
Leave your comments here...