சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை..!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், வைரமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி பூரணஜெயஆனந்த், குற்றவாளி வைரமுத்துவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்