சிறுமியிடம் ஆபாச வார்த்தைகள் பேசியவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த குராயூரை சேர்ந்த சிறுமி பத்தாம் வகுப்பு மாணவியிடம், ஆபாச வார்த்தைகள் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்ட முருகன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

குராயூர் பகுதியில் கணவனை இழந்த பென் டீக்கடை நடத்தி வருகிறார். மகள் சிறுமி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி, இவர் தனது தாயார் வெளியே சென்றபோது டீ கடையில் வியாபாரம் செய்துள்ளார். அப்பொழுது, குராயூர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் இவர் மதுபோதையில், தனியாக இருந்த சிறுமியிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி மாணவியை தொந்தரவு செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து, சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த தாயார், அருகில் உள்ள திருமங்கலம்அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் தனது மகளுடன் நேரில் வந்து புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மாணவியிடம் ஆபாச வார்த்தை பேசிய முருகன் என்பவர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான முருகனை, தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர் .