தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், தற்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
1990-ஆம் ஆண்டு, இயக்குனர் செண்பக ராமன் என்பவர் இயக்கிய, ‘என் வீடு என் கணவர்’ என்கிற படத்தில் ஸ்கூல் சிறுவனாக அறிமுகமானார் அஜித். இதைத் தொடர்ந்து 1993-ஆம் ஆண்டு வெளியான, ‘அமராவதி’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அஜித்துக்கு கிடைத்தது.
இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தான் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு நடிகர் அஜித், தனது மக்கள் தொடர்பாளர் வாயிலாக குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/SureshChandraa/status/1423263557680910339?s=20
அதில் அவர் கூறியிருப்பதாவது: “ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரே நாணயத்தின் மூன்று பகுதிகள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் முழு மனதாக ஏற்கிறேன். வாழு, வாழ விடு. என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித் குமார்” என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Leave your comments here...