டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இரண்டு பக்கமும் இருந்தவர்கள் கல்வீசித் தாக்கிக் கொண்ட போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலர்கள் காயமடைந்தனர்.கல்வீச்சு சம்பவத்தில் பலத்த காயமடைந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
https://twitter.com/MajorPoonia/status/1231914310252630017?s=20
இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட முகமது ஃபுர்ஹான் என்பரும் உயிரிழந்தார். இதனால், டெல்லியின் வடகிழக்கு மாவட்டங்களில் பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதி குறித்து டெல்லி முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்:-டெல்லியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுவது வருத்தமளிப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இது போன்ற செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Leave your comments here...