சாலை வரியை ரத்து செய்யக்கோரி குமரி மாவட்டம் அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்..!

Scroll Down To Discover

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் வேன் வாகன ஓட்டுனர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஊடரங்கு காலங்களில் சாலை வரியை ரத்து செய்யக்கோரியும் ஊடரங்கு காலங்களில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் ஓட்டுனர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரியும் நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் பாபு கூறுகையில்:- கடந்த ஆறு மாத காலமாக எந்த வாகனமும் இயங்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது பல இடங்களில் ஓட்டுநர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அதனால் அரசு கடந்த 6 மாத காலமாக எங்களுக்கு சாலை வரியை செலுத்த வேண்டுமென்று கூறியுள்ளது என கூறினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர் இதில் {CNI3502} அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை குமரி மாவட்ட தலைவர் எல். லினஸ் செயலாளர் ஜெயக்குமார் பொருளாளர் சுபரி வாசன் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் பாபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி : Vasu